பிரக்ஞை!!

 



என் கண்ணாடி கூட இப்போதெல்லாம் பொய் சொல்லி சுலபமாக 

என்னை ஏமாற்றிவிடுகின்றது.


என் விம்பங்களில் எல்லாம் 

அனாதியாய் பிரதிபலிக்கிறாயே...!

யார் நீ?


ஆதி அந்தம் இல்லாத அதுவா நீ ?

இல்லை என்றால் எதுதான் நீ ?

உனக்குப் புரிகின்றதா என் தேடல்? 


ஏன்?

என் தனிமைகளைக்கூட ஆக்கிரமிக்கிறாய்...!


உன் திட்டம் என் தீர்மானத்தைப் புறக்கணித்து 

மேடை ஏறுகின்றது


எல்லா நாடகங்களுக்கும்

திரை விலக்கி, திரை மூடி, காட்சிப்படுத்தியே ஆவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டாயோ?


சொல்! 

ஏன் என் தனிமைகளைக்கூட ஆக்கிரமிக்கிறாய்?


                     -பிரமி-



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.