விடுதலை ஒருநாள் நிச்சயம்!

 


மனிதம் மரணித்த உலகில் அமைதியடைந்த #சாந்தன் அண்ணாவே!


நீங்கள் எப்படியும் வந்துவிடுவீர்கள் என்று நம்பியிருந்தோம் “#அண்ணா”!


வரவேண்டும் என்று சத்தியமாய் விரும்பியிருந்தோம்!


நாங்கள் அதிகமாய்க் கதைப்பது உங்களின் வருகையைத் தாமதப்படுத்திவிடுமோ என்றுகூட அஞ்சியிருந்தோம்!


ஏனென்றால் உங்களை உள்ளே வைத்தவர்களுக்கு நாங்களென்றால் ஆகாது...துடக்கு!


ஏனெனில் நாங்கள் யாரினதும் அடிமைகளாய்ச் செயற்பட உடன்படாதவர்கள்!


இனநலன் விடுத்து அவர்தம் நலன் நோக்காதவர்கள்!


தலையாட்டும் #பொம்மையாய்த் தலையை ஆட்டாதவர்கள்!


என்ன செய்வது அண்ணா!

இன்று எல்லோரும் அடிமைகளைத்தானே விரும்புகின்றார்கள்...ஆதரிக்கின்றார்கள்.


அதற்காக நாங்கள் சோர்ந்துபோக மாட்டோம் அண்ணா!

தியாகங்கள் வீண்போகாது...

அறம் தோற்காது…

நீங்கள் காட்டிய இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியாய்ப் பயணிப்போம்!


விடுதலை ஒருநாள் நிச்சயம்!


ஏனென்றால் விடுதலைப் பயிரை ஈழத் தமிழினம் உரம் போட்டு வளர்க்கவில்லை...

உயிர்களை விதைத்தல்லவா வளர்த்திருக்கிறது!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.