நீச்சல் வீரனே...!


வேதனையில்

விளைந்தாலும்

சாதனைக்கு உனை

வளர்த்தவனே..


பயமறியாத

வயதுனக்கு.

திசைமாறிட

பல வழிகள் சுற்றி

வளைக்குது.


சிந்தை

சிதறி மந்தைகளாய்

பொறுப்பிழந்து

ஒரு கூட்டம்.


ஆனாலும்

நீயோர் அற்புதம்

துணிச்சலுக்கு

ஒளி விளக்கு.

ஒலிம்பிக் வரை

நீந்தட்டும் உன்

சாகசம்.


கடல்

சொந்தம் எமக்கு

உன்

சாகசங்ளை அது

ரசிப்பது

கண்கூடு..


சாதனை

விருதுகளும்

உன் பெயரால்

சிறப்பு

பெறுகின்றது.


மறத்

தமிழனே

வாழிய நீ வாழியவே

சாதனைகள்

நீளட்டும்.

நீரணைகள் உனை

வரவேற்கட்டும்.

வாழ்த்துகள்.

3.03.24

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.