தக்காளி கருப்பு உளுந்து கார சட்னி!

 


தக்காளி கருப்பு உளுந்து கார சட்னி - Tomato Kara Chutney with Black Urid Dal 


தேவையான பொருட்கள்


சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 3

உடைத்த கருப்பு உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்

கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு

மிளகாய் வற்றல் - 8

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கல் உப்பு - தேவையான அளவு


செய்முறை


1. சின்ன வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும். தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 


2. வாணலியில் 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கருப்பு உளுத்தம்பருப்பை சேர்த்து நன்கு சிவந்து வாசம் வரும் வரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும். பின் மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். 


3. அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயத்தை சேர்த்து மிதமான சூட்டில் சிவந்து வரும் வரை வதக்கவும். பின் தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும்.‌


4. அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். தக்காளி நன்கு குழைத்து வதங்கியதும் அடுப்பை அணைத்து தட்டில் மாற்றிக் கொள்ளவும். 


5. வதக்கிய பொருட்களை ஆறவைத்துக் கொள்ளவும். 


6. மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வறுத்த மிளகாய் வற்றல் மற்றும் வதக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும். பின் வதக்கிய தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். 


7. கடைசியாக வறுத்து வைத்துள்ள பெருங்காயம் மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  பின் கிண்ணத்தில் மாற்றி சிறிது தண்ணீர் விட்டு அலசி கலந்துக் கொள்ளவும். 


#chutney #tomatoes #tomatokarachutney #SplitBlackGram #uriddal #virundhombal #foodblogger

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.