தனியார் பாடசாலையில் தீவிபத்து!

 


வெலிகம நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.


வெலிகம நகரில் அமைந்துள்ள தனியார் மகளிர் பாடசாலை ஒன்றின் கட்டிடத்தில் இன்று (03) பிற்பகல் தீ பரவியுள்ளதுடன், நான்கு மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த பொருட்கள் தீயினால் பலத்த சேதமடைந்துள்ளன.


தீ விபத்து ஏற்பட்ட போது, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை ஒட்டியுள்ள இன்னொரு கட்டிடத்தில் 150 குழந்தைகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


இக்கல்லூரி மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், இந்த தீயினால் மாணவர்களின் பாடசாலை உபகரணங்கள் மற்றும் உடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.


தீயை அணைக்கும் பணியில் மாத்தறை தீயணைப்புப் பிரிவினரின் உதவியும் பெறப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.