வடக்கு ஆளுநர் கஜேந்திரனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் !

 


உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணை குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் கோரிக்கையை வடமாகாண ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டன.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக வங்கியால் விவசாய நவீனமாக செயல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்கப்பட இருந்த விதை உருளைக்கிழங்குகள் கிருமித் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.


மனிதனுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடிய ஆபத்தான நுண்ணங்கிகள் காணப்படுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் அவற்றினை மண்ணுக்குள் புதைத்தால் ஆபத்து ஏற்பாடு எனக் கூறிய நிலையில் எரியூட்டப்பட்டன.


அதன் தொடர்ச்சியாகவே யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கேள்விகளை எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.