ஈரத்தீ (கோபிகை) - பாகம் 28!!
என்னை ஆழமாகப் பார்த்த தேவமித்திரன்,
"உண்மையைச் சொல்லவேணும் என்றால், ஆரம்பத்தில் உனக்கும் எனக்குமான சின்னச்சின்ன சண்டைகளாலை எனக்கு உன்னிலை கோபம்தான் இருந்தது.
பிறகு, அம்மா அடிக்கடி உன்னைப்பற்றிச் சொல்லுறதிலை கொஞ்சமமே கொஞ்சம் பாசம் வந்தது. பிறகு தெரியும் தானே... இடப்பெயர்வு, வாழ்க்கைமுறை மாற்றம், கனவுகள் சுமந்த பயணம் என்று உங்கட நினைவே இல்லாமல்போட்டுது சோல்லிவிட்டேன்என்னையே பார்த்த தேவமித்திரனை சற்று கோபமாகவே பார்த்தேன்.
"அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால், என்ர அடிமனசிலை அம்மா சொன்ன விசயம் அப்பிடியே ஆழமா பதிஞ்சு கிடந்தது உன்னைத் திரும்ப பாத்த பிறகு தான் தெரிஞ்சது.
"மாமி என்ன சொன்னவா... ?" அவசரமாகவே கேட்டேன்.
அதை இப்ப சொல்லமாட்டன்.... நேரம் வரும் போது செல்கிறேன்.... " என்ற தேவமித்திரனிடம் அதை அறிந்து விடவேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் எழுந்து நின்றது.
"ஏன்....? " நான் கேட்கத் தொடங்க,
கட்டாயம் சொல்லுவேன்.... ஆனால் இப்ப இல்லை.... " சற்றே கண்டிப்புடன் தேவமித்திரன் சொல்லிவிட நான் மௌனமாகிவிட்டேன்.
"ஆனா...சமர்...உன்னுடைய பட்டப்பெயர் மாத்திரம், என்ரை மனதிலை மறக்கவே இல்லை... மிக மிக ஆழமான இடத்திலை இருந்தது. அந்தப்பெயர் நினைவில் வரும் போதெல்லாம் ஒரு சிரிப்பு எனக்கு வராமல் விடாது.
தேவமித்திரனை முறைக்கவேண்டும் என்று நினைத்து எனது பார்வையை உக்கிரமாக்கிய போதும் ஏனோ என்னால் அது முடியவில்லை. சிரிப்புதான் வந்தது.
இருவருமே பக்கென்று சிரித்து விட்டோம்.
எங்கள் சிரிப்பொலியில் சற்றே உறக்கம் கலைந்து பார்த்த வண்ணமதி மீண்டும் கண்களை மூடி உறங்கத்தொடங்கவும்
"என்ன சிரிப்பு?" என்றேன்.
"நீயும் தானே சிரித்தாய்....' என்றவனிடம் எதுவும் சொல்லாமல் பார்வையை வெளியே திருப்பினேன்.
'ஆனா.. சமர்.... இதுவரைக்கும் அம்மா, அக்கா தவிர வேற எந்தப் பெண்ணும் என்னுடைய வாழ்க்கையில் இல்லை...' இப்படிச் சொன்னவனை ஆழமாக ஒருமுறை பார்த்துவிட்டு தலை குனிந்து கொண்டேன்.
அப்போது தேவமித்திரனின் அலைபேசி மெல்லிய ஒலி எழுப்பி தனது பணியைச் சொல்லியது.
மாமாதான் எடுத்திருந்தார்.
"அப்பா... "
மித்ரா... கனியம்மாவை வீட்டை கூட்டிக் கொண்டு வாவன்... சாப்பிட்டு பிறகு போகலாம்' என்றார்.
"பொறுங்கோ... உங்கட மருமகளிட்டை கேட்டுச் சொல்லுறன்" என்ற தேவமித்திரன், என்னிடம் கேட்கமுன்னரே தலையை ஆட்டிய நான், தேவமித்திரனிடம் அலைபேசியை வாங்கி,
'மாமா... நான் நோயாளர் பார்வைக்கு போகவேணும்.... ஏதாவது செய்துசாப்பிட்டு போறன்... நீங்கள் சிரமப்படவேண்டாம்.... நான் ஞாயிற்றுக்கிழமை உங்களைப் பார்க்க வாறன்... " என்றறேன்.
"என்னடாம்மா... இப்படிச் சொல்லுறாய்... ..?" மாமா செல்ல,
நீங்கள் குடுத்து விட்ட புட்டும் கத்திரிக்காய் பொரிச்ச குழம்பபும் முட்டைப் பொரியலும் நான் நல்லாச் சாப்பிட்டனான்... இனி, ஞாயிற்றுக்கிழமை வந்து நானே சமைக்கிறன்... எல்லாரும் சாப்பிடுவோம் மாமா" என்றேன்.
"புட்டு நான் தான் அவிச்சனான்... கத்தரிக்காய் குழம்பும் முட்டைப் பொரியலும் செய்தது மித்ராதான் " என்றார்.
இதைக்கேட்டதும் மித்திரனின் முகத்தில் சிறு அசட்டுத்தனம் தோன்றியது.
"அப்பா... உங்களுக்கு எத்தினை தரம் சொன்னனான்... ஆக்களுக்கு முன்னாலை என்னை மித்ரா என்று சொல்லாதேங்கோ என்று.... "
"அது... கனியம்மா தானே....வேற யாரோவே... சரி... நான் வைக்கிறன் என்றுவிட்டு போனை வைத்துவிட்டார்.
'மித்ரா....என்றேன்...வேண்டுமென்றே..'
அப்போது தேவமித்திரன் பார்த்த பார்வையில் தகிப்பும் தவிப்புமாக ஒரு உணர்வு தோன்றியது நிஜம்.
"பைற்று... " என்று விட்டு உடனே முன்னால் திரும்பி மகிழுந்தை செலுத்துவதில் கவனமானார்.
நடு மதியப் பொழுதில் நாங்கள் வைத்தியசாலை விடுதியை அடைந்து விட்டோம்.
மிக நேர்த்தியாக கழுவி விடப்பட்டிருந்தது.
மேகவர்ணன் அண்ணா காலையிலேயே ஆள் ஒருவரை ஒழுங்கு படுத்தி கழுவிவிட்டிருந்தார்.
நால்வருமாக பொருட்களை அடுக்கி விட்டு நிமிர்ந்த போது,
"வண்ணமதியை தனியவா விட்டுட்டு போகப்போறாய் சமர், நான் கூட்டிப்போகவா? " என்றகேள்விக்கு ...
'இல்லை. .. கூட்டிக்கொண்டு தான் போறன்.. .அவவும் பழகத்தானே வேணும்.... நெடுக நீங்கள் கூட்டிக்கொண்டு போகவும் ஏலாது.... வீடு பக்கத்திலையும் இல்லை... ' என்றுவிட்டு,
'பள்ளிக்கூடம், ரியூசன் போக எல்லாம் பழகிவிடும்' என்றேன்.
அதுவரை பேசாமல் இருந்த அகரன்,
'நீங்களும் எங்கட வீட்டிலையே இருந்திருக்கலாம்...... ' என்றான்.
நானும் தேவமித்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்...
அகரனும் தேவமித்திரனும்புறப்பபட்ட போது எததோ ஒரு வெறுமை என்னைச் சூழ்ந்து கொண்டது.
தீ தொடரும்...
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை