காதல் ஜோடியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது!


 தென்காசி ஆலங்குளம் அருகே காதல் ஜோடி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனை நோட்டமிட்ட இருவர், அந்த காதல் ஜோடியை செல்போனில் படம் எடுத்து வைத்து, தாங்கள் வனத்துறை அதிகாரிகள் என கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த வகையில் சிறுக சிறுக இதுவரை 3000 ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். ஒருகட்டத்தில் காதல் ஜோடி போலீசில் புகார் அளித்த நிலையில் போலி வனத்துறை அதிகாரி தங்கசாமி (34) கைது செய்யப்பட்டார். தப்பியோடிய ஜெகநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.