கேரள நண்டு மசாலா செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்:


நண்டு - 2


காய்ந்த‌ மிளகாய் - ஒன்று


பச்சை மிளகாய் - ஒன்று


வெங்காயம் - ஒன்று


இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி


மிளகாய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி


மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தக்காளி - 2

உப்பு - ஒரு தேக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

தேங்காய்த் துருவல் - அரை கப்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லித் தழை - 2 கொத்து

எண்ணெய்

செய்முறை

நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்றப் பகுதிகளை நீக்கிவிட்டு நன்கு அலசி இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.


தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த‌ மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.


கடுகு வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.


வாசனை அடங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.


வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.


பிறகு தேங்காய், பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்துப் பிரட்டவும்.


சுமார் 2 நிமிடங்கள் பிரட்டிய பிறகு நண்டுகளையும், கறிவேப்பிலையும் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.


தீயின் அளவைக் குறைத்து வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.


சுவையான கேரள நண்டு மசாலா தயார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.