கேரட் ஸ்வீட் பச்சடி செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்:


கேரட்...... ½ கிலோ


பேரிக்காய் .....1


கொய்யாப் பழம் .....1


அன்னாசி பழம் .....100 கிராம்


தக்காளி ......சாறு அரை கப்


எலுமிச்சை .......1 மூடி 


பச்சை மிளகாய்....... 4


அஜ்வெயின் (ஓமம்) .....அரை ஸ்பூன்


நெய் ........2 ஸ்பூன்


மாதுளம் விதைகள் ......2 ஸ்பூன்


உப்பு .......தேவையான அளவு


செய்முறை :


 கேரட்டை அலம்பி துடைத்துவிட்டு துருவிக்கொள்ளவும். பேரிக்காய் கொய்யாப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக அரிந்து மிக்சியில் போட்டு ஒரே ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும். இதையும் கேரட்டோடு சேர்க்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இதையும் கேரட்டோடு சேர்க்கவும். ஓமத்தை லேசாக வாசனை வரும் வரை வறுத்துப் பொடி செய்து இதையும் கேரட்டோடு சேர்க்கவும் மாதுளம் விதையையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு சிட்டிகை உப்பையும் போட்டுக் கிளறவும்.


  இது புளிப்பு . காரம், இனிப்பு கலந்து புது விதமான சுவையோடு இருக்கும் சப்பாத்தி, பிரட், நாண், பூரி போன்றவற்றோடு பரிமாறலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.