துரத்தப்பட்டார் தமிழினத் துரோகி டக்ளஸ் தேவானந்தா!🎦

 கிளிநொச்சி பொன்னாவெளியிலிருந்து துரத்தப்பட்டார் தமிழினத் துரோகி டக்ளஸ் தேவானந்தா மக்களால் கடும் கண்டன எதிர்ப்போடு அடித்து துரத்தும் சம்பவம் இன்று இடம்பெற்றது.

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று (05) பகல் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது.

ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.