கொலை செய்யப்பட்ட அப்பாவி இளைஞன்!
கம்பஹாவில் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
34 வயதான குறித்த இளைஞன் எந்தவொரு குற்றச்செயலுடனும் தொடர்புபட்டிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தர பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த இளைஞன் கொல்லப்பட்டார்.குறித்த இளைஞன் வாகனங்களை திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.எனினும் அந்தப் பகுதியிலுள்ள சிசிரிவி காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை