குல்சா செய்வது எப்படி ?


தேவையான பொருட்கள்
:


மாவு (மைதா).......1/2 கிலோ

 

எண்ணெய்....... 20 மி.லி.


வெண்ணெய்........30 கிராம்


தயிர்.........3 தேக்கரண்டி


உப்பு..........தேவைக்கேற்ப


பேக்கிங்சோடா.........1 சிட்டிகை


சூடான பால்.......50 மி.லி


செய்முறை :


🍀 உலர்ந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு பெரிய தட்டில் சலிக்கவும். வெண்ணெய், தயிர், எண்ணெய் சேர்த்து திர ங்கனல் பொடி செய்யவும்


🍀 மாவானது நறநறவென்று பொடியான துண்டுகளாக இருக்கும்போது சிறிது பாலை ஒரே நடவையாக சேர்த்து மிருதுவான மாவாக வரும்வரை பிசையவும், ஈர மஸ்லின் துணியால் மூடிவைக்கவும் வேறொரு தட்டால் மூடி 5-6 மணி நேரம் அப்படியே வைக்கவும் இலேசாக மாவை பிசையவும்.


🍀 ஒரு பகுதியை எடுத்து கெட்டியாகவும் வட்டமாகவும் தேவைப்பட்டால் உலர்ந்த மாவை பயன்படுத்தி திரட்டவும்


🍀 ஒரு புறம் தண்ணீர் சேர்த்து தந்தூர் கல்லில ஒட்டவும் நன்றாக வேகும்வரை பேக் செய்யவும்


🍀 வெண்ணெயை அதன்மீது தடவி சூடாக பரிமாறவும்


🍀 காய்கறிகளை உள்வைத்து விதவிதமான பராத்தாக்களை தயாரிப்பது போன்று குல்சா பராத்தாக்களிலும் காய்கறிகளை அடைத்து தயாரிக்கலாம்


🍀 குல்சா பராத்தாக்கள் வெங்காயம், மசாலா மற்றும் காய்கறிகள் உள்வைக்கப்பட்டு பலவிதங்களில் தயாரிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.