கார குழிப்பணியாரம் !


Here is the video link for Kara Kuzhipaniyaram


https://youtu.be/4464fPzt8CU?si=d1EjQuokzpxayJOU


தேவையான பொருட்கள்


புழுங்கல் அரிசி - 1 கப்

பச்சரிசி - 1 கப்

உளுத்தம்பருப்பு - 1/2 கப்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கியது

இஞ்சி - 2  டீஸ்பூன், பொடியாக நறுக்கியது

வெங்காயம் - 2, பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு & உளுந்து - 1 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய்

உப்பு - தேவையான அளவு


செய்முறை


1. ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். பின் போதுமான நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.‌


2. பின் கிரைண்டரில் அல்லது மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். 


3. அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 6 மணிநேரம் புளிக்க வைக்கவும். 


4. வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும். 


5. புளித்த மாவில் வதக்கியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 


6. குழிப்பணியார கல்லை சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் 1 டேபிள் ஸ்பூன் மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி மூடிவைத்து குறைந்த சூட்டில் வேகவிடவும். கீழ்புறம் பொன்னிறமாக மாறியதும் மெதுவாக திருப்பிப் போட்டு மேலும் சில நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். பஞ்சு போல மிருதுவான கார குழிப்பணியாரம் தயார். 


சூடாக தேங்காய் சட்னி‌ அல்லது தக்காளி சட்னியோடு பரிமாறவும். 


#kuzhipaniyaram #tiffin #karakuzhipaniyaram #breakfast #virundhombal #foodblogger #dinner

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.