கால்நடைகளை திருடினால் 10 லட்சம் அபராதம்!

 


கால்நடைகளை திருடினால் 10 லட்சம் அபராதம் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை - பசு திருடர்களுக்கு அமரவீரவின் எச்சரிக்கை

கால்நடைகளை திருடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10000 ரூபா தண்டப்பணத்தை திருத்தம் செய்து பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பசு திருடர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை உரிமையாளர்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் மாடு திருடர்களுக்கு மிக உயர்ந்த தண்டனை வழங்கப்படும் என்றும், தற்போது நடைபெற்று வரும் நீதி நடவடிக்கைக்கு இணையாக மாடு திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையும் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் என்றும் அமரவீர தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.