மலேசியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் #விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!📸


மலேசியாவில் பெரக் பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகொப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (23) காலை 9.32 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  


இராணுவ ஹெலிகொப்டர்கள் தரையில் விழுந்து நொருங்குவதற்கு முன்பு, ஹெலிகொப்டர்களில் ஒன்று மற்றொன்றின் ரோட்டரில் மோதியுள்ளது. இதன்போது மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தின் விளையாட்டு ஸ்டேடியம் பகுதியில் ஒன்று விழுந்து நொருங்கியுள்ளதுடன், மற்றொன்று அருகில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்து நொருங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.