2வது டெஸ்ட் போட்டியில் இருந்து சந்திமால் விலகல்!


பங்களாதேஷுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியில் இருந்து தினேஷ் சந்திமால் ‘குடும்ப மருத்துவ அவசரநிலை’ காரணமாக உடனடியாக விலகியுள்ளார்.

அதன்படி, சந்திமால் உடனடியாக நாடு திரும்புவார் என இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) தெரிவித்துள்ளது.

“இலங்கை கிரிக்கெட், அவரது அணி வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் தினேஷ் சந்திமாலுக்கு இந்த தேவையின் போது முழு ஆதரவை வழங்குவதுடன், அவரது மற்றும் அவரது குடும்பத்தின் தனியுரிமையை பொதுமக்கள் மதிக்க வேண்டும்” என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பங்களாதேஷின் Chattogram இல் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் இன்று.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.