விழிப்பு!!


 பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவது உங்களை உங்கள் நாட்டில் இருப்பதை போன்ற உணர்வை தருகின்றது என அங்கு அண்மையில் சென்று பார்வையிட்டு வந்த ஈழத்தவர் ஒருவர் நக்கலாக பதிவு செய்திருந்தார்.. அதாவது அவர் சொல்ல வருகிற விடயம் உங்களின் நாட்டு கலை பொருட்கள் செல்வங்களை எல்லாம் கொண்டு வந்து இங்கு வைத்துள்ளார்கள்..ஆக பார்வையிடும் உங்களுக்கு உங்கள் தாய்நாட்டில் இருப்பது போல உணர்வை தரும் என விளித்திருக்கிறார்.


பிரிட்டிஷ் தரப்பில் இதற்கு ஏற்கனவே பல தடவை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.அந்தந்த நாட்டு பிரபுக்கள் ராஜாக்கள் தங்கள் மேன்மையை உணர்த்தவும்,நட்பு பாராட்டவும் இதை கொடுத்தார்கள் சிலவற்றை தாம் எடுத்தோம் என சொல்லியிருந்தார்கள்.


ஒரு நாட்டின் கலைபொருட்களை அந்தந்த நாட்டு மக்களால் காப்பாற முடியாமல் போனது கேவலமான ஒரு விடயம்தான்..அதனை விட கேவலமான விடயம் அவர்கள் இன்றைய காலங்களில் இங்கு வந்து அவற்றை பார்த்து ஆச்சரியமடைவது..அதனை விடவும் கேவலமான விடயம் என்னவென்றால் பிரிட்டிஷ்காரன் திருடிவிட்டான் என கூறி கொள்வது..


ஒரு காலத்தில் இவர்கள் எல்லோரும் இங்குதா நாக்கை தொங்க போட்டு கொண்டு வருவார்கள் என அன்றே பிரிட்டிஷ்காரன் கணித்து 

அதனை தீர்க்கதரிசனமாக அங்கு கொண்டு வந்து பத்திரமாக வைத்திருக்கலாம்..இவர்களிடமே விட்டிருந்தா இதில் பாதி இப்போது இருந்திருக்காது என்பது வேற கதை!  


இத்தனை நாடுகளை வென்றிருக்கிறோம் என்று சொல்லாம சொல்ல வருகிறான்..அதனை சரியான முறையில் விளங்கி கொள்ளும் போது அதற்கான சரியான எதிர்வினைகளை எம்மால் ஆற்ற முடியும்.


-Muller

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.