புத்தாண்டு பிறக்கும் நேரம்!!

 


இலங்கையில் ,மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது.

அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு 12.15 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும் .

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம்: குரோதி தமிழ் வருஷ பிறப்பு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 31ம் நாள் (13/04/2024) சனிக்கிழமை இரவு 9.04 மணியளவில் குரோதி வருடம் ஆரம்பமாகின்றது.

மேலும் அன்றைய தினம் திருக்கணிதத்தின்படி விஷு புண்ணிய காலமாக பங்குனி 31ம் நாள் (13.04.2024) மாலை 5.04 மணி முதல் நள்ளிரவு 1.04 வரை விஷு புண்ணிய காலமாக திருக்கணிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரோதி வருஷத்தில் தோஷ நட்சத்திரங்களாக மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம் 1ம் 2ம் 3ம் பாதம் சித்திரை, விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை, அவிட்டம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து நல்ல கருமங்களை செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மருத்துநீர் விஷுபுண்ணிய காலத்தில் அதாவது பங்குனி 31ஆம் நாள் (13.04.2024) மாலை 4.15 இல் இருந்து நள்ளிரவு 12.15 வரையான காலத்தில் விஷு புண்ணிய காலமான இந்நேரத்தில் மருத்துநீர் தேய்த்து சிரசில் புன்கிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானம் செய்து தோஷ நிவர்த்தி பெறுவது நன்மையானதாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி விஷு புண்ணிய காலமாக பங்குனி 31ம் நாள் (13.04.2024) மாலை 5.04 முதல் பின் இரவு 1.04 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும். இப்புண்ணிய காலத்தில் மருத்துநீர் வைத்து தலையில் ஆலிலையும் காலில் இலவம் இலையும் வைத்து ஸ்நானம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

குரோதி வருஷ பிறப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துயில் எழுந்து ஸ்நானம் செய்து நித்திய கருமங்களை முடித்து கண்ணாடி தீபம் பூரண கும்பம் முதலான மங்கல பொருட்களை தரிசித்து சூரியனுக்கு பொங்கல் பூஜை வழிபாடுகள் மேற்கொண்டு விருந்தினர்களை உபசரித்து சிரார்த்தம், தர்ப்பணம் செய்ய இருப்போர் அதனையும் நிறைவேற்றி, உறவினர் நண்பர்களுடன் முன்போல் போஜனம் மேற்கொண்டு சுகந்த சந்தன புஷ்பாதிகளை அணிந்து புது வருடத்தில் செயற்படுத்தக்கூடிய நற்கருமங்களை சிந்தித்து மங்களகரமாக வாழ்வோமாக.

அத்துடன் ஸ்நானம் செய்ததன் பின்னர் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு முதியோர் பெரியோர்களிடம் ஆசி பெற்று அறுசுவை பதார்த்தங்களையும் போஜனம் செய்வது சிறப்பானதாகும். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரோதி வருடப்பிறப்பு புத்தாடை நிறமாக கபிலம், பட்டு போன்ற வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளை கரை கொண்ட புதிய பட்டாடை அணிவது சிறப்பானதாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரோதி வருஷ பிறப்பு புத்தாடையாக கருநீல நிற பட்டு அல்லது நீல கரை வைத்த புது வஸ்திரம் அணிவது சிறப்பானதாகும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.