லண்டன் நீதிமன்றம் அளித்த விசித்திர தண்டனை !

லண்டனில் புலம்பெயர் இளைஞரின் கொடுஞ்செயல்... நீதிமன்றம் அளித்த விசித்திர தண்டனை | Man Sentenced Indefinite Detention Hospitalலண்டனில் தொழுகை முடித்து மசூதியில் இருந்து வெளியேறிய இருவர் மீது நெருப்பு வைத்த விவகாரத்தில் இளைஞருக்கு லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லண்டன் மற்றும் பர்மிங்காமில் தொழுகை முடித்து மசூதியில் இருந்து வெளியேறிய 82 வயது Hashi Odowa மற்றும் 72 வயது Mohammed Rayaz என்பவர்கள் மீது பெட்ரோல் வீசி நெருப்பு வைத்துள்ளார் முகமது அப்கர் என்ற இளைஞர்.


2023ல் நடந்த இந்த கோர சம்பவத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், அந்த இளைஞர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது. ஆனால் schizophrenia என்ற மனக் கோளாறால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்ததை அடுத்து 29 வயதான முகமது அப்கர் மீதான தீர்ப்பு தாமதமானது.

தற்போது உளவியல் நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், அப்கர் காலவரையின்றி, மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும், அவரை மருத்துவமனையில் இருந்து விடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகார சபையால் முடிவெடுக்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தாக்குதலின் தன்மையும் ஒரே மாதிரியாக இருந்தது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மீது பெட்ரோலை வீசி, பிறகு தீ வைத்துள்ளதும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மட்டுமின்றி, ஒரு தாக்குதல் சம்பவம் பிப்ரவரி மாதமும் இன்னொன்று மார்ச் மாதமும் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் சிக்கிய இருவரும் மருத்துவமனை சிகிச்சை முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டது.

குடிநீர் போத்தலில் பெட்ரோல் சேமித்து வைத்திருந்த அப்கர், அதை இருவர் மீதும் வீசியுள்ளார். இந்த நடவடிக்கையை தீவிரவாத செயலாக அதிகாரிகள் எதிர்கொள்ளவில்லை.

2017ல் சூடானில் இருந்து பிரித்தானியாவில் புலம்பெயர்ந்துள்ள அப்கர் மனக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதை உளவியல் நிபுணர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.

அப்கரை சிறை தண்டனைக்கு விதித்தால், எஞ்சிய சிறைவாசிகளுக்கு அது சிக்கலாக முடியும் என்றும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.