3 பெண்கள் கார் விபத்தில் பலி!!

 


அமெரிக்காவில் நடந்த பயங்கர கார் விபத்தில் 3 இந்திய பெண்கள் உயிரிழந்தனர்.


ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


தெற்கு கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி கவுண்டியில் ஏப்ரல் 27 சனிக்கிழமையன்று விபத்து ஏற்பட்டது.


தகவல்களின்படி, மூன்று பெண்களும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.


இந்த பெண்களின் பெயர்கள் ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர்கள் பயணித்த SUV கார் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து முதலில் தடுப்பு வேலியில் மோதியதால், பாலத்தில் இருந்து விழுந்து மரங்களில் சிக்கி விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்த மூன்று பெண்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று பெண்களும் அமெரிக்காவில் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வந்தனர்.


தகவலின்படி, காரில் நான்கு பெண்கள் இருந்துள்ளனர். அவர்கள் அட்லாண்டாவிலிருந்து தென் கரோலினாவுக்குச் சென்று கொண்டிருந்தனர்.


விபத்து நடந்த போது காரின் வேகமும் அதிகமாக இருந்தது. காரின் வேகம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து மிகவும் பயங்கரமானது, பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார் சுமார் 20 அடி உயரத்திற்கு குதித்தது.


விபத்து நடந்த போது காரின் வேகமும் அதிகமாக இருந்தது. காரின் வேகம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.