பட்டிருப்பு வலையகல்விப் பணிப்பாளர் செய்யும் வேலை!!

 


மட்டக்களப்பு பட்டிருப்பு வலயத்தில் விசித்திரமான விபரீதமான ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் இரவுவேளை வீடுகளை தட்டி வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


அதிகாரப்பசி, அடாவடித்தனம், பாரபட்சம், பழிவாங்கள்,ஊழல், மோசடி, அரசியல்வாதிகள் பிக்குகளுக்கு அடிவருடுதல் போன்றவை வலயக் கல்விப் பணிப்பாளருடைய இரத்தத்தோடு கூடிய DNA இயல்புகளாகும்.


தற்போது இவரது அடாவடி நடவடிக்கைகளாலும், முறைகேடான நடவடிக்கைகளாலும் கணிசமான அதிபர்கள் ஆசிரியாகள், பெற்றோர்கள், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.ஓர் ஆசிரியை டம்மி அதிபரின் அடாவடியால் தீக்குளித்துப்பின் தப்பியுள்ளார்.


அந்த அதிபரை வலயக் கல்விப் பணிப்பாளர் காப்பாற்றி விட்டார். இதனால் பட்டிருப்புத் தேசிய பாடசாலையில் பெற்றோர்கள்,அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,நலன் விரும்பிகள் வெளிப்படையாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் அரகலயப் போராட்டம் போல் நீட்சியடையும் நிலை ஏற்பட்டது. இந்த அடாவடியின் பின்னணியில் மட்ட்க்களப்பிய பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுக்கட்சியினர் இருப்பதாக அறியப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் ஆளுனர் மற்றும் மாகாணத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பணிப்பாளரை இடம்மாற்றுவதற்கான கடிதத்தினை வழங்கிவிட்டதாக அறியப்படுகிறது.


இதனையறிந்த அல்லது இடமாற்றக் கடிதத்தினைப் பெற்ற சிறீதரன் தனக்குச் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்யுமாறு டம்மி அதிபர்களின் வீடுகளுக்குச் சென்று வருகின்றார். 7,8,9/04/2024 திகதிகளில் இரவோடு இரவாக அதிபர்கள் சிலரின் வீடுகளுக்குச் சென்று தனக்காக ஆர்ப்பாட்டம் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கெஞ்சி வருகின்றார்.களுதாவளை,பெரிய கல்லாறு,மகிழூர் முனை,முனைத்தீவு, செட்டிபாளையம்,பழுகாமம் பாடசாலைகளுக்குரிய அதிபர்களின் வீடுகளுக்குச் சென்று அழாக்குறையாகக் கெஞ்சி வருகின்றார். இவர் எந்த வலயத்திலும் நிலையாகப் பணியாற்றியவர் அல்லர். மட்டக்களப்பு மத்திய வலயத்தில் நிதி மோசடி, மேற்கு வலயத்தில் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகம், திருமலை வலயத்தில் அதிகார துஷ்பிரயோகம் என்று தொடர் சாதனையை குறுகிய காலத்தில் இவர் நிகழ்த்தியுள்ளார்.


முன்னாள் ஆளுனர் யகம்பத்,முன்னாள் கல்விச் செயலாளர்களான முத்து பண்டா, பென்னான்டோ, பிக்குகள் ஆகியோரின் அடிவருடியாக இருந்து வலயக் கல்விப் பணிப்பாளர் , தப்பிப்பிழைத்து வந்தார். தற்போதைய ஆளுனரின் அடிவருடியாக மாறுவதற்கு இவர் முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை. அரசியல்வாதிகள் மேலதிகாரிகளின் கால்களைப் பிடித்தவாறு,அதிபர் ஆசிரியர்களைப்பழி வாங்குவதே இ வரின் தந்திரமாகும். மோசடியால் நியமனம் பெற்ற இவர் தொடர்ந்தும் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றார்.


இவரது போலி நியமனம் தொடர்பாக ஆளுனர் விசாரணைக்கு ஆணை பிறப்பித்தால் சிறைக்குள் இருக்க வேண்டிய ஒருவராவார். ஒரு விசாரணையின் போது முன்னாள் ஆளுனர் யகம்பத்,முன்னாள் செயலாளர் பெர்னனான்டோ சிறீ, மொட்டுக் கட்சிக்காரன் என்பதால், பாதுகாத்துவிட்டார்கள். இவ்விலையில் இப்போதைய ஆளுனர் செந்தில் நடவடிக்கை எடுத்தால் கல்வி சமூகம் நனைமை அடையும் என சமுருக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.மொட்டின் தீவிர ஆதரவாளரான குறித்த நபர் எதிர்மறையான செயற்பாடுகளில் வல்லவனாக விளங்குகின்றார். அதுமட்டுமல்லாது இவர் கிஸ்புல்லா, அமிரலி,கருணா, வியாழேத்திரன், சந்திரகுமார்,பிள்ளையான்,சைக்கிள் சுரேஷ், ஜனா ஆகியோரின் சகாவாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.சாணக்கியனின் ஆதரவாளன் போன்றும் நடித்து வருகின்றார். தற்போது அவர்களில் சிலர் நம்ப முடியாதவர் என்ற வகையிலும்,மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சியும் குறித்த நபரை கைவிட்டுள்ளதாக அறியப்படுகிறது. அதேவேளை கோட்டக்கல்வி அதிகாரி சீருடை வழங்கலுக்கான கூட்டம் என்று அதிபர்களை அழைத்து விட்டு, குறித்த நபருக்கு ஆதரவாகக் கையொப்பம் பெறுவதற்கு முயற்சி எடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது அதிபர்களை நிர்ப்பந்திக்கின்ற அடிப்படை மனித உரிமைமீறலாகும்.அதோடு இந்த செயல் அதிகார துஷ்பிரயோகமாகும். நெறிபிறழ்வான மனிதர்கள் இருக்க வேண்டிய இடம் கல்வி அலுவலகங்கள் அல்ல. மனநல வைத்தியசாலைகள் தான். அரசியல்வாதிகள், மேலதிகாரிகளுக்கு அன்பான வேண்டுகோள் என்னவென்றால், குறித்த நபரை எந்த அலுவலகத்துக்கும் அனுப்பி உத்தியோகத்தர்கள் மக்களைக் குழப்ப வேண்டாம்.


மனநலச்சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவும்.அதிபர்களே ஆசிரியர்களே பெற்றோர்களே மாணவர்களே போலிகளை அசல் என்று நம்பி ஏமாற வேண்டாம். ஆர்ப்பாட்டத்திற்குத் துணை போய் அடாவடியர்க்கு அடிவருடியாக மாற வேண்டாம் எனவும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்,


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.