அதிர்ஷ்டம் தேடி வர மாதங்கி வழிபாடு!!

 


நம் முன்னோர்கள் காலத்திலிருந்து சொல்லும் ஒரு வாக்கு பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது. இந்த புதன்கிழமைக்கு அத்தகைய மகத்துவம் உண்டு. புதன்கிழமையில் நாம் துவங்கும் காரியங்கள், செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்பதும் புதன் என்பது புத கிரகத்திற்குரிய நாள் என்பதும் தான் இதற்கு காரணம். 


இவர் நம்முடைய புத்தி, செயல், மனம் அனைத்தையும் தெளிவாக வைத்திருந்து நல்ல சிந்தனைகளையும் நல்ல முடிவுகளையும் எடுக்க வைக்க கூடியவர். ஆகையால் அன்றைய தினத்தில் நாம் செய்யும் செயல்களும் வெற்றி பெறும் என்பது ஐதீகம். அப்படியான அந்த தினத்தில் நம்முடைய அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ள ஒரு அற்புதமான தீப பரிகார முறை உள்ளது. அது என்ன என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

அதிர்ஷ்டம் வீடு தேடி வர மாதங்கி வழிபாடு 

ஒருவருக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டால் கூரையில் வாழ்பவர் கூட குபேரராய் மாறி விடுவார் இது பலரும் அறிந்தது தான். சரி அந்த அதிர்ஷ்டத்தை எப்படி வர வைப்பது? அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சில தெய்வ வழிபாடுகளின் மூலம் அதை வர வைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு வழிபாட்டிற்குரிய தெய்வம் தான் மாதங்கி. இந்த தெய்வத்தை புதன்கிழமையில் குளிகை நேரத்தில் (10.30 to 12.00 )வழிபடும் பொழுது அதிர்ஷ்டத்தை நம்முடைய வீட்டிற்க்கே வர வைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 


அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த வழிபாடு செய்வதற்கு மாதங்கி படம் அல்லது சிலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இந்த அன்னைக்கு நாம் நெய்வேதியமாக மாதுளை முத்துக்களை வைக்க வேண்டும். 

இப்பொழுது ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி பார்ப்போம் இதற்கு ஒரு தேங்காய் வாங்கி அதை இரண்டு சமபாகமாக உடைக்க வேண்டும். அதில் கண் இருக்கும் முடி தேங்காயை வலது புறமாகவும், மற்ற தேங்காய் இடது புறமாகவும் வைத்து விடுங்கள். 

அதில் கொஞ்சம் கற்கண்டு சேர்த்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இதையெல்லாம் செய்யும் நேரம் புதன்கிழமையில் குளிகை நேரமாக இருக்க வேண்டும் அது மிக மிக முக்கியம். இந்த நேரத்தில் வழிபாடு செய்யும் பொழுது தான் இந்த அன்னையின் அருளை முழுவதுமாக பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.

வாரம் தோறும் புதன்கிழமையில் குளிகை நேரத்தில் இந்த வழிபாடு தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது அதிர்ஷ்ட கெட்டவன் என்று பெயர் பெற்றவர் கூட அதிர்ஷ்டசாலியாக மாறி விடலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.