விமானங்களில் ஜன்னல் கோள வடிவில் கொடுக்கப்படுவது ஏன்?


விமானங்களில் எல்லோருக்கும் பிடித்த இடம் ஜன்னல் ஓர இருக்கைதான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, விமானம் மேலே எழும்போதும், இறங்கும்போது ஒரு அலாதியான உணர்வு ஏற்படும். ஆனால், அந்த ஜன்னல்கள் பொதுவாக பஸ், கார் உள்ளிட்டவற்றில் இருப்பது போன்று சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா?

ஆம். விமான ஜன்னல்கள் சதுரமாகவோ அல்லது கூர்மையான முனைகளுடன் வடிவமைக்கப்படுவதில்லை. ஏன் இவ்வாறு வட்டமாகவோ அல்லது கோள வடிவிலோ வடிவமைக்கப்படுகிறது என்பது குறித்த சற்றே ஆய்வு செய்தோமேயானால் பல விஷயங்கள் தெரிய வருகின்றன. 1949ம் ஆண்டு உலகின் முதலாவது வர்த்தக விமானமான டீ ஹாவிலேண்ட் காமட் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்து தயாரிப்பாக வெளிவந்த இந்த விமானங்கள் மிக நேர்த்தியான டிசைன் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தை கொண்ட விமானங்களாக பாராட்டுகளை பெற்றன.

இந்த நிலையில், இந்த விமானங்களுக்கு பெரும் சோதனைகள் காத்திருந்தன. அறிமுகம் செய்யப்பட்டு வர்த்தக ரீதியிலான சேவையில் இருந்த இரண்டு டீ ஹாவிலேண்ட் காமட் விமானங்கள் நடுவானில் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான தயாரிப்பு நிறுவனம், இதுகுறித்து தீவிர விசாரணைகளையும், ஆய்வுகளையும் நடத்தியது. ஆனால், விமானங்கள் நடுவானில் திடீரென வெடிப்பதற்கான காரணம் அறியாமல் குழம்பின. இந்த சூழலில் தீவிர விசாரணைகளுக்கு பின்னர், இரு விமானங்களிலும் ஜன்னல்களில் வெடிப்பு ஏற்பட்டு விமானம் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. அந்த விமானங்களில் சதுர வடிவில் இருந்த ஜன்னல்களால்தான் விபத்து ஏற்படுவதும் தெரிய வந்தது.

விமானம் அதிக காற்றழுத்தம் கொண்ட பகுதிகளில் பறக்கும்போது ஜன்னல்களின் நான்கு முனைகள் வெளிக்காற்று அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை இருப்பதை விமான தயாரிப்பு துறை நிபுணர்கள் கண்டறிந்தனர். கூர்மையான முனை பகுதிகள் வலு இல்லாத பகுதியாக இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, ஜன்னல்களில் கூர் முனை இல்லாத வகையில், வட்ட வடிவிலும், கோள வடிவிலும் உருவாக்க முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இப்போது வரும் விமானங்கள் அனைத்திலும் வட்டம் அல்லது கோள வடிவிலான ஜன்னல் டிசைன் கொடுக்கப்படுகிறது.

இதுபோன்று வடிவமைக்கப்படும்போது வலு விழந்த பகுதி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், வெளிப்புற காற்றழுத்தம் ஜன்னல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதிக காற்றழுத்தத்தை தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாத நிலை இருப்பதை உணர்ந்துதான் பெரிய விமானங்கள் 30,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கின்றன. அங்கு பறக்கும்போது காற்றழுத்தம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.