துவையல் எனும் பழங்கால உணவுமுறை!!

 


துவையல் முறையை பயன்படுத்தியவர்களில் பழந்தமிழர்கள் முன்னோடிகள் என்பதை பதிற்றுப்பத்து எனும் நூலின் வழி உணரலாம்.


துவரை துவையலை பழங்கால தமிழர் விரும்பி உண்டனர் என்பதை பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.


இன்றும் அரிசி நொய்க்கஞ்சி செய்யும் கிராமவாசிகள் துவரைத் துவையலை தொட்டுக்கொள்வார்கள்.

எனவே பழங்கால முதலே உணவு முறையில் துவையல் ஒரு துணைப்பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.


துவையல் சுவைக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் அன்று பயன்படுத்தப்பட்டது, அதாவது செரிமானத்தை தூண்டும் உணவுப் பொருளாகும்.


மிளகு, சீரகம், மிளகாய், உப்பு, புளி ஆகிய மசாலாப் பொருட்கள் எல்லாவித துவையல்களிலும் சேர்க்கப்படும் பொதுவான பொருளாகும்.


மிளகு ஒரு காப்பு பொருளாகும், என்சைம்கள் எனப்படும் நொதிகள் அழியாதவாறு பாதுகாத்தும், உடலின் நச்சுக்களை நீக்கச் செய்யும் ஆற்றல் மிளகுக்கு உண்டு, சுவைக்குரிய காரத்தினையும் மிளகு அளிக்கிறது.



சீரகம்= சீர் + அகம், உள்ளுறுப்புகளை சீர்ப்படுத்தும் தன்மை சீரகத்திற்கு உண்டு, சுவைக்குரிய விறுவிறுப்பை அளிப்பதுடன் நாவில் உமிழ்நீரை சுரக்கச் செய்யும், இதனால் உணவில் உள்ள புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள் எளிதில் செரிமானம் ஆகும்.


மிளகாய் காரத்தன்மைக்குச் சேர்க்கப்பட்டாலும் அது தாமிரச்சத்தினை உடலுக்கு அளிப்பதாகும், உடம்பின் நிறத்தை பராமரிக்க உதவுகிறது.


அவ்வாறே புளியும், உப்பும் சுவைக்காக சேர்க்கப்படுவதாகும், எனவே துவையலின் பொதுக்குணம் சாப்பிடும் உணவில் உள்ள புரதம், கொழுப்பு ஆகியவைகளை


1.எளிதில் ஜீரணிக்க செய்தும்

 2.நாவில் சுவையை ஊட்டவும்

3. அரோசிகம் எனப்படும் ருசியின்மையை நீக்கவும் பயனாகிறது எனலாம். 



இனி சிறப்பாக சில மூலிகைகளை மேற்கொண்ட பொருட்களுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்துவதால் சிலவகை நோய்கள் தீருவதை அறியலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.