பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!


பொலன்னறுவை, கிரித்தல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை 40 வயதுடைய நபரே மேற்கொண்டுள்ளதாகவும் அவருக்கும் சிறுமிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 8.45 மணியளவில் பொலன்னறுவை, கிரித்தல பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யுவதி, திருமணமான ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

அவர்களுக்கிடையிலான வாக்குவாதம் காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.