இன்றைய உதவி வழங்கல்!!

 


தமிழ் நாட்டைச் சேர்ந்த சகோதரர் பாலகிருஷ்ணன் அவர்கள் தனது சகோதரியின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு  யுத்தத்தில் மகனை இழந்த தாய் ஒருவரது வாழ்வாதாரத்திற்கு உதவும் முகமாக ஆடு ஒன்றினை வழங்கி வைத்ததோடு 


மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளையும் வழங்கி வைத்துள்ளார். 


தொப்புள்கொடி உறவான சகோதரர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருபவராவார். 


தனது சகோதரியின் நினைவு நாளில் இல்லாதோர்க்கு உதவி புரிந்து நினைவுகூறும் நல்லுள்ளம் கொண்ட சகோதரருக்கு பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது  நன்றிகளை தெரிவித்துள்ளதோடு ஆத்மா சாந்திக்கும் பிரார்த்தித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.