சம்பளத்தை உயர்த்திய கவின்!!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் தற்போது ஸ்டார் மற்றும் கிஸ் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றி கவினுக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை தேடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்தினாராம் நடிகர் கவின். இதன்பின் இவருடைய சம்பளம் ரூ. 3 கோடி என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரூ. 7 கோடியாக உயர்த்திவிட்டாராம்.
கடந்த ஆண்டு டாடா எனும் ஒரே ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ள கவின், தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய அளவில் சம்பளத்தை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துள்ளதாம்.
இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை