ஊர் நிலைமை!!

 





நாங்கள் இயந்திரங்களை பற்றியும் இயந்திர தொழில் நுட்பங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிற இதே நிலத்தில்தான் நமது தம்பிகளும் தங்கைகளும் நமது குழந்தைகளும் ஒரு நேர உணவை உண்டபடி, பாடசாலைக்குச் சென்று வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலான பிள்ளைகளின் தாய்மார்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்குச் சென்றிருக்க இந்தப் பிள்ளைகள் வீட்டில் தாத்தா பாட்டியுடனும், சித்தி மார்களுடனும் வசித்து வருகிறார்கள். அவர்கள் கற்கிற கிராமப்புற பாடசாலைகளில் கட்டக் குறைபாடு, நூலகம் அற்ற நிலை என்று இடர்களும் தொடர்கின்றன. 






அன்றைக்கு ஒருநாள் தொடருந்தில் பயணப்பட்டுக்கொண்டிருந்தேன். நான் இருந்த இருக்கைக்கு அருகில் ஒரு தாயும் மகளும் அமர்ந்திருந்தார்கள். மகளுக்கு சுமார் 30 வயதிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு புன் சிரிப்போடு நான் என்னுடைய பயணத்தில் இருக்க முணு முணு என்று யாரோ எதையோ தொடர்ந்து சொல்லுகிற சத்தம் காதுகளில் விழவே வெளியில் பார்த்துக்கொண்டிருந்த காட்சிகளில் இருந்து விடுபட்டு தலையை திருப்பினேன். அருகிருக்கையில் இருந்த பெண் ஜெபிப்பதை போல ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. சரி என்றுவிட்டு நான் மீளவும் பயணத்தின் இட வெளிகளிலும் காட்சிகளிலும் லயித்திருக்க, 

“Sorry உங்களுக்கு சத்தம் வந்ததோ தெரியவில்லை, நான் பிராத்தனை பாடல்களை பாடிக்கொண்டிருந்தேன்” என்றார் அந்த இளவயதுப் பெண். 

பறவாயில்லை என்பது போல புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு 

“எங்க போறீங்கள்” என்றேன், 

“நான் Airport போறன், என்ன கூட்டிக்கொண்டு அம்மா வந்தவா, இண்டைக்கு எனக்கு flight”, 

“எந்த நாட்டுக்கு போறீங்கள்?”

“சவுதி”

சரி என்பது போல் தலையசைத்தேன், அந்தக் பெண் தொடர்ந்தார் 

“இண்டைக்கு என்ர மகனுக்கு exam அதான் pray பண்ணினனான்”,

“இங்க ஒரு அலுவலகத்தில வேல செய்தனான் சம்பளம் காணாது அதுதான் போறன்.”.

… 

நான் தலையசைத்துவிட்டு அமைதியானேன், 

நான் இறங்கவேண்டிய இடம் வந்தபோது “பாத்து போங்க..tc” 

என்று மட்டுமே சொல்ல முடிந்தது. ஆனால் 

அந்தப்பெண்ணின் 10 வயது நிரம்பிய முகமறியாத அந்தப் பிள்ளையை நினைத்துக்கொண்டேன். 


சர்மிளா விநோதினி


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.