தமிழர்களும் சித்திரைப்புத்தாண்டும்...

 


பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது. இந்தப் புத்தாண்டானது எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியையும் குடும்பத்தினர்  உறவினர்களுக்கு இடையில் அன்பையும் விதைக்கவேண்டும் என  வாழ்த்துகின்றோம். 


தமிழர்கள் சித்திரை புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் ?அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்த ஒரு பார்வையே இது.



புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் மருத்து நீர் வைத்து தோய்ந்து புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகின்றனர்.   இங்கு மருத்துநீர் வைத்து தலைக்கு நீர் ஊற்றல்  என்பது  சுத்தப்படுத்தும் ஒரு சடங்கு என்பதுடன் மருத்துவரீதியாகவும் இது பார்க்கப்படுகிறது. 

தமிழர் பண்பாட்டில்  வருடப்பிறப்பென்பது குடும்பங்களுக்கு இடையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற ஒரு பண்டிகையாகும். 


 இந்த நாளில் சுவையான பொங்கல் வைத்து சிற்றுண்டிகள் தயாரிப்பது தமிழர் பண்பாடாகும் .  பொங்கல் செய்வதென்பது இடத்திற்கிடம் மாறுபடுகின்றது. சிலர் வெண்பொங்கல் செய்வார்கள். சிலர் சக்கரைப்பொங்கல் செய்வார்கள். பின்பு ஒவ்வோர் குடும்பமும் ஒன்றாக இணைந்து களிப்புடன் அதனை உண்டு மகிழ்வார்கள் . 


அயலவர்கள்  உறவினர்கள் என அனைவரது வருகையால் மகிழ்ச்சி தழைத்தோங்கும் இந்த இனிய நாளில் பலகாரங்கள் செய்வது தமிழர்களின் வழமையாகும்.   பகிர்ந்துண்ணல் என்பது சிறந்த மனிதப் பண்பு ஆகும்.  எனவே புத்தாண்டு தினத்தில் பயித்தம் உருண்டை அரியதரம்   சிப்பி சோகி பால்ரொட்டி கேசரி  லட்டு மற்றும் முறுக்கு வடை போன்ற பலகாரங்களைத் தயாரிப்பார்கள். 


அவரவர் தயாரித்த பலகார வகைகளை மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். 

அத்தோடு கைவிசேடம் வழங்கல் என்கிற ஒரு விடயம் இந்நாளில் முக்கியம் பெறுகிறது. வீட்டில் உள்ள சிறார்களுக்கு பெரியவர்கள் கைவிசேடமாக வெற்றிலையில் நெல்மணிகளோடு ஒற்றை ரூபாவுடன் காசுத்தாள்களையும் வைத்துக்கொடுப்பார்கள். 


தொழில் தளங்களிலும் இவ்வாறான கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நடைபெறும். 

செல்வாக்கானவர்களின் கையினால் கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் கையில் பணம் புழங்கும் என்பது பொதுவான  நம்பிக்கையாக உள்ளது. 


சித்திரைத் திருநாளில் கிடுகு பின்னுதல், கயிறு இழுத்தல், கோலம் போடுதல், மாட்டுவண்டிசவாரி ஆகிய கிராமிய விளையாட்டுப்போட்டிகளையும் நடத்தி மகிழ்வார்கள். 


தற்போது இந்த மரபுகள் சில மாற்றமடைந்திருப்பினும் சில இடங்களில் இவ்வாறான குதூகலங்கள் இப்போதும் கொண்டாடப்பட்டே வருகின்றது.

மீண்டும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தினைத்தெரிவித்துக்கொள்கிறோம். 


கோபிகை. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.