மின்சாரம் துண்டிக்கப்படுமா!!

 


இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக முன்னெடுக்கப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.


இதன்படி, பண்டிகைக் காலத்தில் எவ்வித இடையூறுமின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தேவையான எரிபொருளை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.