இவ்வாண்டு மிதமான வளர்ச்சியை எட்டும் பொருளாதாரம்!!

 


நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஏப்ரல் மாதத்துக்கான மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய வங்கி, அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


பெப்ரவரி மாதத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 239.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொள்வனவு செய்துள்ளது.


அதன்படி, இவ் வருடத்தில் இதுவரை அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்தத் தொகை 1,199 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.