உளுந்தங்களி / Ulunthu Kali செய்முறை!


தேவையான பொருள்கள் -

கருப்பட்டி - 1/2 கப்

பச்சரிசி - 1/2 கப்

தோல் உளுந்து - 1/2 கப்

நெய் - 2 மேஜைக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை -

பச்சரிசி, தோல் உளுந்து இரண்டையும் சேர்த்து மிக்சியில் திரித்துக்கொள்ளவும். கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதோடு பொடித்து வைத்துள்ள கருப்பட்டியை சேர்த்து கரையும் வரை வைத்திருக்கவும். கரைந்தவுடன் வடிகட்டியில் ஊற்றி வடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் நான் ஸ்டிக் கடாயை வைத்து வடி கட்டிய கருப்பட்டி தண்ணீரை ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்ததும் அதோடு பாதி அளவு நெய். நல்லெண்ணெய் சேர்க்கவும். பிறகு மாவை சிறிது சிறிதாக சேர்த்து கை விடாமல் கிளறவும்.

கெட்டியாக மாவு சுருண்டு வரும் போது மீதமுள்ள நெய், நல்லெண்ணெய் ஊற்றி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

கையில் லேசாக எண்ணையை தொட்டுக் கொண்டு மாவு சிறிது சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும். இந்த அளவுக்கு 6 களி உருண்டைகள் வரும். சுவையான உளுந்தங்களி ரெடி

குறிப்புகள் -

பச்சரிசி, தோல் உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து மிசினில் திரித்து ஏர் டைட் பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவையான பொழுது உபயோகபடுத்திக் கொள்ளலாம்.

தோல் உளுந்துக்கு பதிலாக வெள்ளை முழு உளுந்தும் உபயோகிக்கலாம்.உளுந்தங்களி பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.