பிரபல யூடியூபர் மதன் கௌரியின் சொத்து மதிப்பு!!

 



சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகும் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் மதன் கௌரி.


உலகில் நடந்துக்கொண்டிருக்கும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இவர் வீடியோ செய்து தனது கருத்துகளை தெரிவித்து வருவார்.


அவருடைய YouTube சேனிலில் ஒவ்வொரு நாளும் தவறாமல் வீடியோ பதிவேற்றுவார். இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.




YouTube இல் சுவாரஸ்யமான தகவல்களையும், உள்ளூர் முதல் உலக விபரங்கள் வரையிலான தகவல்களையும் வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவர் தான் மதன் கௌரி.


இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.


மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்துகொண்டு, அதன்படி வீடியோக்கள் போடுவதால் இவரது YouTube பயணம் வெற்றிக்கரமாக நகர்ந்துக் கொண்டு இருக்கின்றது எனலாம்.


இவர் வெளியிட்ட பல வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்வது வழக்கம்.  


இவருடைய சேனலுக்கு சுமார் 7மில்லியன் Subscribers உள்ளனர்.


இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தில், இளைஞர்களே அதிகமானவர்களாக இருக்கின்றனர். 


தூத்துக்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது காதலிக்காக செய்த வீடியோ ஒன்றின் மூலம் வைரலாகினார்.மதன் கௌரியின் நிகர மதிப்பு சுமார் 7.18 மில்லியன் அமெரிக்கா டெலராகும்.


இந்த எண்ணிக்கையானது YouTube விளம்பர வருவாயை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

அதாவது மதன் கௌரியின் நிகர மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.


மதன் கௌரி யூடியூப் சேனல் ஒவ்வொரு நாளும் 997.76 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை ஈர்க்கிறது.

மதன் கௌரி YouTube சேனல் ஒரு மாதத்திற்கு $119.73 அமெரிக்க டொலரும் ஆயிரம் விளம்பர வருவாயையும் ஆண்டுக்கு $1.8 மில்லியனையும் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.