மாணவி மீது இரும்பு கம்பிகள் குத்தியதில் மாணவி படுகாயம்!

 


O/L பரீட்சை எழுதி விட்டு பஸ்ஸில் வீடு திரும்பிய மாணவி மீது முன்னால் சென்ற லொறியிலிருந்த இரும்பு கம்பிகள் குத்தியதில் மாணவி படுகாயம்.


பலாங்கொடை வெலிகேபொல பிரதான வீதியால் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்றுக்கு முன்னால் இரும்புக்கம்பிகளை ஏற்றிச்சென்று கொண்டிருந்த லொறியிலிருந்த கம்பிகள் பஸ் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உட்புகுந்ததில் O/L பரீட்சையை எழுதி விட்டு குறித்த பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த மாணவியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயத்தை ஏற்ப்படுத்தியது.


படுகாயமடைந்த மாணவி சிகிச்சைகளுக்காக பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் 


விபத்தைஏற்படுத்திய லொறிசாரதியும் பஸ் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.