இன்னமும் எங்களை மடையர்களாக நினைத்து கொண்டு இருக்கின்றார் போல இருக்கின்றது!!

இப்பவும் தம்பி வருவாரென்ற நம்பிக்கையிலதான் இருக்கன். 

வரவில்லையென்டா அப்படியே காணாமல் போனதாகவே இருக்கட்டும். 

வேறேன்ன செய்ய? 

நட்டஈட்ட வாங்கிறதென்டா தம்பி செத்துப்போனதா தானே அர்த்தம். 

அப்படியென்டா திதியல்ல கொடுக்கோனும். 

அந்த நட்டஈட்ட என்ட கையால வேண்டின உடனே நான் இறந்தது மாதிரிதான்

2007  ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி சுப்பிரமணியம் இராமச்சந்திரன் என்கிற  ஊடகவியலாளர்  சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பாக  கட்டுரையொன்றை எழுதியதற்காக  காணாமலாக்கப்பட்டார் 

கடத்தப்பட்ட அன்று இராமச்சந்திரன்  சகோதரி ஜெயரத்தினம் கமலாசினி தனது சகோதரன் இரவு 8 மணிக்கு பின்னரும் கூட வீடு திரும்பாதது குறித்து கவலையடையத் தொடங்கியுள்ளார். 

இரண்டு தடவைகள் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டுள்ளார், 

அவ் வேளை இராமசந்திரன் தற்போது தன்னை இராணுவத்தினர் முகாமில் வைத்து விசாரித்து வருவதாகவும் தான் பாதுகாப்பாக திரும்பிவருவேன் எனவும் சொல்லி உள்ளார் . 

எனினும் அதிகாலை 4.00 மணியாகியும் தனது சகோதரர் திரும்பாதை தொடர்ந்து திருகமலாலிசினி மீண்டும் தனது சகோதரரை தொடர்பு கொண்டுள்ளார். 

அவ் சந்தர்ப்பத்தில்  அவர் தன்னை தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டாம் எனவும் அதனால் தனக்கு பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார். 

அடுத்த நாள் கமலாலிசினி தனது தந்தையுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று சகோதரன் இராமசந்திரன் தேடியுள்ளார்.

எனினும்  இராணுவத்தினர் இராமச்சந்திரன் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது 

தாங்கள் அவரை பார்க்கவுமில்லை, கைது செய்யவுமில்லை என சொல்லி இருக்கின்றார்கள் 

ஆனாலும் பல நாட்களாக இராணுவ சிவில் அலுவலகத்தில் மணித்தியாலக் கணக்கில் கமலாசினியும் அவரது தந்தையும் காத்து நின்றார்கள்  

கமலாசினி அடிக்கடி அங்கு சென்று காத்து இருந்தது பலனை அளித்தது. 

இரக்கச்   சுபாவத்திலான புலனாய்வு அலுவலர் ஒருவர் இலங்கை ராணுவம் கைது செய்து  ஈ.பி.டி.பி யினரிடம் ஒப்படைத்துள்ளனர் என்கிற தகவலை   கமலாசினிக்குக் கூறியிருந்தார். 

டக்ளஸ் தேவானந்தவைச் சந்திக்குமாறு கமலாசினியிடம் புலனாய்வு அலுவலர் பணித்திருந்தார்.

அதன் பிரகாரம் அவரிகுடும்பத்தினர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த போது இராமச்சந்திரன் தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டதாலேயே அவரை கொண்டுசென்றதாக சொல்லி உள்ளார் 

அதன் பின்னரும் மீண்டும் ஒரு தடவை இராமச்சந்திரன் குடும்பத்தினர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்  

அவ்வேளை இராமச்சந்திரனின் தந்தைக்கும் டக்ளஸ்க்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.  

ஈபிடிபி இராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படுகின்றது.

ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றது என இராமச்சந்திரனின் தந்தை நேரில் குற்றம்சாட்டி இருந்தார் 

அதற்கு பதிலளித்த டக்ளஸ் இராணுவம் குறித்து எதனையும் தெரிவிக்க வேண்டாம் 

அவ்வாறு தெரிவித்தால் சு**டப்படுவீர்கள் என எச்சரித்து இருந்தார் 

உண்மையில் இராமச்சந்திரன் விவகாரம் என்பது பல கண்ணால் கண்ட சாட்சிகளை கொண்டது. 

வடமராட்சி  கலிகை சந்தியில் அவர் காணாமலாக்கப்பட்டது  முதல் பல்லப்பை இராணுவ முகாமில் 2013 இல் அவர் காணப்பட்டது வரையில்  கண் கண்ட  பல தகவல்கள்  உள்ளது.

பொலிஸ் நிலையம் முதல் ஜனாதிபதி ஆணைக்குழு வரை அவரது குடும்பத்தினர் நீண்ட வாக்குமூலங்களை வழங்கி இருக்கின்றார்கள் 

ஆனால் இன்றுவரை எந்த தீர்வுமில்லை.  

சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளோ அல்லது டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட ஒட்டுக்குழு ஆயுதாரிகள் மீது குறைந்தபட்ச  விசராணைகள் கூட நடத்தப்படவில்லை 

ஆனால் அவர் திரும்பிவருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது குடும்பம் 17  வருடம் காத்திருக்கின்றது

தங்கள் மரணத்திற்கு முன்னர் மகனை பார்த்துவிட வேண்டும் என்று கதறிக்கொண்டிருந்த  இராமசந்திரனின் பெற்றோர் கூட இறந்து விட்டார்கள்   

இப்பவும் தம்பி வருவாரென்ற நம்பிக்கையிலதான் இருக்கன். 

வரவில்லையென்டா அப்படியே காணாமல்போனதாகவே இருக்கட்டும். 

வேறேன்ன செய்ய? 

நட்டஈட்ட வாங்கிறதென்டா தம்பி செத்துப்போனதா தானே அர்த்தம். 

அப்படியென்டா திதியல்ல கொடுக்கோனும். அந்த நட்டஈட்ட என்ட கையால வேண்டின உடனே நான் இறந்தது மாதிரிதான்

17 வருடங்களாக தம்பியின் வருகைக்காக காத்திருக்கும் அக்காவின் வலி இது

2007  ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி சுப்பிரமணியம் இராமச்சந்திரன் என்கிற  ஊடகவியலாளர் 

சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பாக  கட்டுரையொன்றை எழுதியதற்காகவே  காணாமலாக்கப்பட்டார் 

 கடத்தப்பட்ட அன்று இராமச்சந்திரன்  சகோதரி ஜெயரத்தினம் கமலாசினி தனது சகோதரன் இரவு 8 மணிக்கு பின்னரும் கூட வீடு திரும்பாதது குறித்து கவலையடையத் தொடங்கியுள்ளார். 

இரண்டு தடவைகள் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டுள்ளார், 

அவ் வேளை இராமசந்திரன் தற்போது தன்னை இராணுவத்தினர் முகாமில் வைத்து விசாரித்து வருவதாகவும் தான் பாதுகாப்பாக திரும்பிவருவேன் எனவும் சொல்லி உள்ளார் . 

எனினும் அதிகாலை 4.00 மணியாகியும் தனது சகோதரர் திரும்பாதை தொடர்ந்து திருகமலாலிசினி மீண்டும் தனது சகோதரரை தொடர்பு கொண்டுள்ளார். 

அவ் சந்தர்ப்பத்தில்  அவர் தன்னை தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டாம் எனவும் அதனால் தனக்கு பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார். 

அடுத்த நாள் கமலாலிசினி தனது தந்தையுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று சகோதரன் இராமசந்திரன் தேடியுள்ளார்.

எனினும்  இராணுவத்தினர் இராமச்சந்திரன் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது 

தாங்கள் அவரை பார்க்கவுமில்லை, கைது செய்யவுமில்லை என சொல்லி இருக்கின்றார்கள் 

ஆனாலும் பல நாட்களாக இராணுவ சிவில் அலுவலகத்தில் மணித்தியாலக் கணக்கில் கமலாசினியும் அவரது தந்தையும் காத்து நின்றார்கள்  

கமலாசினி அடிக்கடி அங்கு சென்று காத்து இருந்தது பலனை அளித்தது. 

இரக்கச்   சுபாவத்திலான புலனாய்வு அலுவலர் ஒருவர் இலங்கை ராணுவம் கைது செய்து  ஈ.பி.டி.பி யினரிடம் ஒப்படைத்துள்ளனர் என்கிற தகவலை   கமலாசினிக்குக் கூறியிருந்தார். 

டக்ளஸ் தேவானந்தவைச் சந்திக்குமாறு கமலாசினியிடம் புலனாய்வு அலுவலர் பணித்திருந்தார்.

அதன் பிரகாரம் அவரிகுடும்பத்தினர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த போது இராமச்சந்திரன் தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டதாலேயே அவரை கொண்டுசென்றதாக சொல்லி உள்ளார் 

அதன் பின்னரும் மீண்டும் ஒரு தடவை இராமச்சந்திரன் குடும்பத்தினர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்  

அவ்வேளை இராமச்சந்திரனின் தந்தைக்கும் டக்ளஸ்க்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.  

ஈபிடிபி இராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படுகின்றது.

ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றது என இராமச்சந்திரனின் தந்தை நேரில் குற்றம்சாட்டி இருந்தார் 

அதற்கு பதிலளித்த டக்ளஸ் இராணுவம் குறித்து எதனையும் தெரிவிக்க வேண்டாம் 

அவ்வாறு தெரிவித்தால் சுடப்படுவீர்கள் என எச்சரித்து இருந்தார் 

உண்மையில் இராமச்சந்திரன் விவகாரம் என்பது பல கண்ணால் கண்ட சாட்சிகளை கொண்டது. 

வடமராட்சி  கலிகை சந்தியில் அவர் காணாமலாக்கப்பட்டது  முதல் பல்லப்பை இராணுவ முகாமில் 2013 இல் அவர் காணப்பட்டது வரையில்  கண் கண்ட  பல தகவல்கள்  உள்ளது.

பொலிஸ் நிலையம் முதல் ஜனாதிபதி ஆணைக்குழு வரை அவரது குடும்பத்தினர் நீண்ட வாக்குமூலங்களை வழங்கி இருக்கின்றார்கள் 

ஆனால் இன்றுவரை எந்த தீர்வுமில்லை.  

சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளோ அல்லது டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட ஒட்டுக்குழு ஆயுதாரிகள் மீது குறைந்தபட்ச  விசராணைகள் கூட நடத்தப்படவில்லை 

ஆனால் அவர் திரும்பிவருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது குடும்பம் 17  வருடம் காத்திருக்கின்றது

தங்கள் மரணத்திற்கு முன்னர் மகனை பார்த்துவிட வேண்டும் என்று கதறிக்கொண்டிருந்த  இராமசந்திரனின் பெற்றோர் கூட இறந்து விட்டார்கள்   

இது போன்ற ஆயிரக்கணக்காக்கான சம்பவங்களின் சூத்திரதாரியான டக்ளஸ் தேவானந்தாவை தனது அருகில் வைத்து கொண்டு காணாமலாக்கப்பட்ட அப்பாவிகளுக்கு தீர்வு தருவதாக திரு ரணில் விக்ரமசிங்கே சொல்லுகின்றார் 

இன்னமும் எங்களை மடையர்களாக நினைத்து கொண்டு இருக்கின்றார் போல இருக்கின்றது

இனமொன்றின் குரல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.