மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்) செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்:


மீன் - 5 பெரிய துண்டுகள்

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


செய்முறை


மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவின மீனை போட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள் தூவி நன்றாக பிரட்டி வைக்கவும்.


பின்னர் மீனின் மீது கோதுமை மாவைத் தூவவும்.


இப்படி ஒவ்வொரு மீனிலும் தூவி, அதை ஒரு தட்டில் வைத்து 10 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மீனை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும். எளிமையாக செய்யக்கூடிய அரேபியன் மீன் வறுவல் தயார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.