உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி!

 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் இன்று நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

குறித்த அஞ்சலியின் பின்னர் கருத்துத் தெரிவித்த துரைராசா ரவிகரன், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.

ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார்.

அஞ்சலி நிகழ்வில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூக செயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.