தயிர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்


எண்ணெய்/நெய் - 5 டேபிள் ஸ்பூன்


சீரகம் - 1 டீஸ்பூன்


பட்டை - 1 பெரிய துண்டு


பெரிய வெங்காயம் -2 (நறுக்கியது)


பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)


இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்


தயிர் - 1 கப்


சிக்கன் - 1/2 கிலோ


உப்பு - சுவைக்கேற்ப


மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்


சீரகத் தூள் - 2 டீஸ்பூன்


மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்


கரம் மசாலா - 2 டீஸ்பூன்


காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்


கொத்தமல்லி - ஒரு கையளவு


செய்முறை


🚩முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிக்கன் ஒரு பதத்திற்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


🚩பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.


🚩பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.


பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.


🚩பிறகு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.


🚩பின் அதில் சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.


🚩பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.


🚩சிக்கன் நன்கு வெந்ததும், அதில் காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.