திருத்தணி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்!


திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கடந்த 22 நாட்களில் பக்தர்கள் ஒருஇ கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், பிரசித்தி பெற்ற 5வது படை திருக்கோயிலாகும்.

இந்த திருக்கோயிலுக்கு, ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கிருத்திகை மற்றும் வார விடுமுறை நாட்கள் போன்ற தினங்களில் மக்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர்.

அதிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும், கோடை விடுமுறையில் வழக்கமாகவே பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்.

விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியதென்று கூறப்படுகிறது. சிவபார்வதி மைந்தன் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பதால் வைகாசி விசாகத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. முருகன் அவதரித்த வைகாசி விசாக நாளில் முருகனின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடைபெறும்.

அப்படி வரும் பக்தர்கள், மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர். இதைப்போல் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அனைத்து கோயில்களிலும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம்.


திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உட்பட அதன் உபகோவில்களில் பக்தர்கள் செலுத்திய நகை -பணம், ஆகியவற்றையும் அனைத்தையும் இணைத்து திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் வசந்த மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.

உண்டியல் காணிக்கை (offertory) எண்ணும் பணியில், திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள்; கோ.மோகனன், வி. சுரேஷ்பாபு, உஷார் ரவி, மு.நாகன், ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். உண்டியல் பணத்தை என்னும் பணி முடிந்த பிறகு அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டது.

உண்டியல் எண்ணிக்கையின் முடிவில் கடந்த 22 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கலி எண்ணிக்கை விவரத்தினை திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.