அமைச்சர் பௌசியின் மகன் கைது!


முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்தை ஏற்படுத்தி விபத்துக்குள்ளான வீதியில் பயணித்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பாடசாலை மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபரான ஏ.எச்.எம்.பௌசியின் மகனைக் கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.