ஈழத் தமிழர்கள் தொடர்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிப்பு!


இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கானசுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை பிரதிநிதி விலேநிக்கெல் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸில் இவ்வாறான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவது இது முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

 ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிப்பதன்மூலம் நிரந்தர சமாதானத்திற்காக சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழர்கள் இனப்படுகொலை உட்பட வன்முறைகள் மீள நிகழாமையை உறுதி செய்யவேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.