டென்மார்க் அன்னை பூபதியம்மாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் வணக்க நிகழ்வு!📸

டென்மார்க் கொல்பேக் நகரில் 05.05.2024 அன்று அன்னை பூபதியம்மாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் பொதுச் சுடரேற்றி, மலர் வணக்கம், அக வணக்கம் செலுத்தியபின் பொதுமக்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து எழுச்சிக் கானங்கள் இசைக்கப்பட்டது. சிறப்புற நடந்தேறிய இவ் வணக்க நிகழ்வின் இறுதியில் தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எழுச்சி கோசத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.