ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் திருவிழாக்கால அறிவித்தல்!


அம்பிகை அடியார்களே! 

இவ்வருட மஹோற்சவப் பெருவிழா, எதிர்வரும் 24.05.2024 வெள்ளிக்கிழமை ஆரம்பமாக இருக்கின்றது. அம்பிகைக்கு புதிதாக அமைக்கப்பட்ட மஹாலயத்தில், இவ்வருட திருவிழா நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.


இவ் விழாக்காலங்களில், அம்பிகைக்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற விரும்பும் டியவர்கள், ஆலய புதிய ஒழுங்கமைப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அன்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


கற்பூரச் சட்டி உள்வீதி


உள் வீதியில் கற்பூரச் சட்டி எடுக்க விரும்பும் அடியவர்கள், ஆலய பூஜை நிறைவடைந்ததும், அம்மன் வீதி உலா புறப்படும் பொழுது உங்கள் கற்பூரச் சட்டிகளை ஏற்றி சாமி ஊர்வலத்துடன் தரித்திருக்காது ஆலயத்தை சுற்றி வந்து உங்கள் நேர்த்திக் கடன்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


கற்பூர சட்டி வெளிவீதி


வெளி வீதியில் கற்பூரச் சட்டி எடுக்க விரும்பும் அடியவர்கள், தேருக்கு சாமி புறப்படும் பொழுது உங்கள் கற்பூரச் சட்டிகளை ஏற்றி உடன் வெளியே வந்து தேரடியில் காத்திருந்து, தேர் புறப்படும் பொழுது தேருடன் சேர்ந்து வெளிவீதி வந்து உங்கள் நேர்த்திக்கடன்களை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.


தேசிக்காய் விளக்குப் பூஜை, மாவிளக்குப் பூஜை தேசிக்காய் மற்றும் மாவிளக்குப் பூஜைகள், வழமை போல் ஆலய மண்டபத்தில் இடம் பெறும், பூஜை முடிவடைந்ததும் உங்கள் தீபங்களை கையில் எடுத்து ஆலயத்தை சுற்றி வந்து ஆலயத்திற்கு வெளியில் அதற்கென அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.


நன்றி


நிர்வாகசபை


ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் ஆப்பெற்றால் 4798017,


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.