செட்டிநாடு ஸ்டைல் முட்டை மசாலா செய்வது எப்படி?

 



தேவையான பொருள்கள்:


முட்டை - 5 வேக வைத்தது

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி - சிறிது

பூண்டு - 4 பல்

கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

கரம்மசாலா - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய்

தாளிக்க

சோம்பு - அரை தேக்கரண்டி

பட்டை - சிறிய துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 1

பிரிஞ்சி இலை - சிறிதளவு

சீரகம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை


🍁வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும்


🍁அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.வதக்கியவற்றை எடுத்து சற்று ஆறவைத்து, நறுக்கின இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்


🍁மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த முட்டையை கீறி விட்டு சேர்த்து கிளறவும்


🍁அத்துடன் அரைத்த விழுதினையும் சேர்த்து கிளறிவிடவும்


🍁அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்


🍁க்ரேவி கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்


🍁சுவையான முட்டை மசாலா தயார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.