மின்னல் தாக்கத்தால் மின் உபகரணங்கள் சேதம்!
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக அநுராதபுர மாவட்டத்தின் கஹகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 205 ஆம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவின் சம்பத்கம கிராமத்தில் நேற்று (20) மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்றும், அதன் மின் உபகரணங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.
இதனால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.
மழை மற்றும் மின்னல் காலங்களில் மின் உபகரணங்களை பாவனையிலிருந்து துண்டித்து வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களான கங்கா ஹேமமாலி மற்றும் திலினி தில்ஹாரா ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை