போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது!


ரூ.200 மில்லியன் பெறுமதியான 2 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற 47 வயதான பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து கொக்கேய்ன் போதைப்பொருளை கடத்தி வந்த சந்தேக நபரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மாவு அடங்கிய மூன்று பொதிகளுடன் தனது பயணப் பையில் மறைத்து 2 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள மூன்று கொக்கெய்ன் பார்சல்களை கடத்த முயன்றதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்துவதற்காக குறித்த பெண்ணுக்கு 1000 அமெரிக்க டொலர்கள், விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் ஹோட்டல் தங்குமிடங்கள் இலங்கையில் ஐந்து நாட்கள் தங்குவதற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.