போதைப்பொருட்களுடன் தொடர்புபட்ட 67 பேர் ஒரு வாரத்தில் கைது !

 


குற்றச்செயல்கள், போதை பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை போன்றவற்றுடன் தொடர்புபட்ட 67 பேர் கடந்த ஒரு வார காலத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார்.

திருட்டுச் சம்பவங்கள் மற்றும் கசிப்பு விற்பனை,கசிப்பு உற்பத்தி, சட்ட விரோத சாராயம் விற்பனை, ஐஸ் போதை பொருள், ஹெரோயின், கேரள கஞ்சா, மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

ஏற்கனவே பிணை வழங்கப்பட்டவர்கள் மற்றும் விளக்க மறியலில் வைக்கப்பட்டவர்கள் அடங்கலாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.