கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்!


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.