உறவினரை நம்பிச் சென்ற யுவதிக்கு நேர்ந்த கொடுமை!!

 


ஆடை வடிவமைப்பாளர் ஒருவரை மாவத்தகம பொலிஸ் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. மாவத்தகம பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாவத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் என்றும் அவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை  எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேவேளை சந்தேக நபரால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 19 வயதுடைய சிறுமி சந்தேக நபரின் உறவினர் என மாவத்தகம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட  இளம் பெண் தனது உறவினரிடம் ஆடை வடிவமைப்பு (பேஷன் டிசைனிங்) பற்றி அறிந்து கொள்வதற்காக   பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக பொலிஸார் கூறுகின்றனர்.

பயிற்சி வகுப்பு முடிந்ததும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மற்றொரு பெண்ணுடன் வகுப்பை விட்டு வெளியேறச் சென்றபோது, ​​மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து  வகுப்பில் சிறிது நேரம் தங்கியிருந்த இரண்டு இளம் பெண்களிடம், சந்தேக நபர் குடிப்பதற்கு ஏதாவது எடுத்து வரவா? எனக் கேட்டுள்ளனர். அவ்விரு பெண்களும் அதற்கு ஆமோதித்தனர்.

வெற்று போதலில் ஏற்கெனவே ஊற்றிவைத்திருந்த மதுவை, அந்த நபர் அருந்த கொடுத்துள்ளார். இரு யுவதிகளும் தங்களுக்குத் தெரியாமல் மது அருந்தியுள்ளமை   பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதில்  ஒரு குவளையை மட்டும் குடித்து விட்டு இளம்பெண் ஒருவர் வெளியேறியதுடன், சந்தேக நபர், தனது உறவினரான பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக   தெரிவித்துள்ளார்.

இதனால்  எவ்விதமான சந்தேகமும் வராமல் அந்த பெண்ணை நிறுத்திக்கொண்டுள்ளார். சந்தேக நபரும் இந்த மதுபானத்தை அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

19 வயதுடைய சிறுமி பானமாக கருதி அதிக மதுபானம் அருந்தியதால்   சோர்வடைந்த  பின்னரே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.